கதிரவன் தோன்றும் காலையிதே
Kathiravan Thondrum Kaalaiyithe
கதிரவன் தோன்றும் காலையிதே
புதிய கிருபை பொழிந்திடுதே - நல்
துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே
வான சுடர்கள் கானக ஜீவன்
வாழ்த்திடவே பரன் மாட்சிமையே
காற்று, பறவை, ஊற்று நீரோடை
கர்த்தருக்கே கவி பாடிடுதே
காட்டில் கதறி கானக ஓடை
கண்டடையும் வெளி மான்களைப் போல்
தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீராம்
தற்பரன் இயேசுவைத் தேடிடுவோம்
கர்த்தர் கிருபை என்றென்றும் ஓங்க
கர்த்தரே நல்லவர் என்றுரைப்போம்
கேருபீன்கள் மத்தியில் வாழும்
கர்த்தர் இக்காலையில் எழுந்தருள்வார்
எந்தன் உதடும் உந்தனைப் போற்றும்
என் கரங்கள் குவிந்தே வணங்கும்
பாக்கியம் நான் கண்டடைந்தேனே
யாக்கோபின் தேவனே என் துணையே
காலை விழிப்பே கர்த்தரின் சாயல்
கண்களும் செவியும் காத்திருக்கும்
பாதம் அமர்ந்து வேதமே ருசித்து
கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன்
வானமும் பூமி யாவும் படைத்தீர்
வானம் திறந்தே தோன்றிடுவீர்
ஆவல் அடங்க என்னையும் அழைக்க
ஆத்தும நேசரே வந்திடுவீர்