காலை தோறும் கர்த்தனே
Kaalai Thorum Karthane
காலை தோறும் கர்த்தனே-புது
கிருபையை தினம் பொழிகின்றீரே
காலை தோறும் கர்த்தனே
நம் தேவன் நல்லவரே
மாதேவன் வல்லவரே
உம் சமூகம் எனகானந்தமே
ஆழியின் அலைகள் ஓயாதுபோல்
அன்பின் அலைகள் எழும்புமே
மலைகள் விலகும் பர்வதம் அகலும்
மாறா உம் கிருபை நீங்கிடாதே
ஆதி அதிசயம் அற்புதங்கள்
வல்லமை நானும் கண்டிடவே
மகிமையின் சாயல் அணிந்து நானும்
மந்தில் மறுரூபமாகிடுவேன்
சபையின் நடுவில் வல்லமை விளங்க
சந்ததம் ஓங்கும் கழ் நிற்க
சர்வ வல்லவரே உம் அன்பின் மார்பில்
சாய்ந்திடுவேன் நான் என்றென்றுமாய்
கனிமரமாய் நான் செழித்திடவே
கர்த்தரே உமது பெலன் தாரும்
காலா காலத்தில் பலனைக் கொடுக்க
கண்மணி போல் என்னைக் காத்திடுவீர்
ஜாதிகள் நடுவே உம் ஜனமே
கலங்கரை விளக்காய் திகழவே
எரியும் தீபங்கள் தொடர்ந்து எரிய
அக்கினி ஆவி ஊற்றிடுவீர்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter