• waytochurch.com logo
Song # 15143

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்

Kattadam Kattidum Sirpigal


கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்
சுத்தியல் வைத்து அடித்தல்ல
ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல

ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்
ஒவ்வொரு செயலாம் கற்களாலே
உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்
பத்திரமாக தாங்கிடுவார்

கைவேலை அல்லா வீடொன்றை
கடவுளின் பூரண சித்தப்படி
கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்
கட்டிடுவோமே நித்தியத்திற்காய்

பாவமாம் மணலில் கட்டப்பட்ட
பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே - ஆவலாய்
இயேசுவின் வார்த்தைக் கேட்போம்
அவரே மூலைக்கல் ஆகிடுவார்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com