Karthave Neer Matchimai கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே
கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே
துதி மகிமைக்கெல்லாம்
என்றென்றும் பாத்திரரே - உந்தன்
நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன்
ஆராதனை ஆராதனை - உந்தன்
நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன்
மகத்துவமும் பேர் புகழும்
உம் கரத்திலிருக்கின்றதே - எந்த
மனிதனையும் மேன்மைப்படுத்த
உம்மால் ஆகுமே
ஐசுவரியமும் ஆனந்தமும்
உம் கரத்திலிருக்கின்றதே
எந்த மனிதனையும் உயர்த்திடவே
உம்மால் ஆகுமே
சத்தியமும் ஜீவனுமே
உம் கரத்திலிருக்கின்றதே
எந்த மனிதனையும் விடுவித்திட
உம்மால் ஆகுமே