• waytochurch.com logo
Song # 15151

கர்த்தாவே தேவர்களில்

Karthave Devargalil


கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
உமக்கொப்பானவர் யார் ?
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் ?

செங்கடலை நீர் பிளந்து உந்தன்
ஜனங்கலை நடத்தி சென்றீர்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர்

தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன்
ஜனங்களை போஷித்தீரே
உம்மைப்போல் யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட

கன்மலையை நீர் பிளந்து உந்தன்
ஜனங்கலை தாகம் தீர்த்தீர்
உம் நாமம் அதிசயம் இன்றும்
அற்புதம் செய்திடுவீர்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com