கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்
Kalanguvathean Kanneer
கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்
நேசரின் கரங்களே தேற்றுமே
இயேசுவின் காயங்கள் ஆற்றுமே
சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்
உடைந்து போன உன்
நெஞ்சம் காண்கிறார்
அழைத்த தேவன் உன்னை
நடத்திச் செல்வார்
கண்ணீரை துடைப்பார்
கவலைகள் மாற்றுவார்
புது ஜீவன் ஊற்றுவார்
புது சிருஷ்டியாக்குவார்
அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்
அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார்
நீதி தேவன் உனக்கு நியாயம் செய்வார்
நிச்சயம் பலன் தருவார்
வியாதியில் சுகம் தருவார்
துன்பப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை
தள்ளப்பட்டாலும் மடிந்து போவதில்லை
வாழும்தேவன் உன்னை காத்துக்கொள்வார்
இயேசுவின் மகிமையுமே
உன்னிலே வெளிப்படும்
சீக்கிரம் நீங்கிடும் இந்த
லேசான உபத்திரவம்
பிரிவில் வாடும் உன் இதயம் பார்க்கிறார்
கதறிஅழும் உந்தன் கண்ணீர் காண்கிறார்
தாயைப்போல உன்னை தேற்றிடுவாரே
ஒரு தந்தையைப் போல உன்னை
ஆற்றிடுவாரே - இழந்த உறவாக
உன்னோடு வாழ்ந்திடுவாரே
கரம் பற்றி எந்நாளும்
உன்னோடு நடந்திடுவார்