• waytochurch.com logo
Song # 15156

கண்ணோக்கிப் பார்த்த தேவா

Kannoki Paartha Deva


கண்ணோக்கிப் பார்த்த தேவா
கலக்கங்கள் தீர்த்த தேவா
பாவச் சேற்றில் வாழ்ந்த என்னை
உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா

தாயே என் இயேசு நாதா
தந்தையே மா யேகோவா

கர்ப்பத்தில் நான் தோன்றும் முன்னே
என்னைப் பெயர் சொல்லி அழைத்தவரே
கருவிலே நான் தோன்றும் முன்னே
உந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர்

இரத்தத்தாலே மீட்டவரே
(எனக்கு) இரட்சிப்பு தந்தவரே
பாவமெல்லாம் தீர்த்தவரே - என்னை
பரலோகில் சேர்ப்பவரே

கண்மணி போல் காப்பவரே
கண்ணீரைத் துடைப்பவரே
எண்ணமெல்லாம் நிறைந்தவரே
என் இதயத்தைக் கவர்ந்தவரே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com