Karthar En Belanum கர்த்தர் என் பெலனும் என் கீதமும்
கர்த்தர் என் பெலனும் என் கீதமும்
நான் நம்பும் கன்மலையுமானாவர்
கர்த்தர் என் கிருபை என்றைக்கும்
நான் பாடுவேன் நான் போற்றிடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அவர் கரமும் அவர் புயமும்
மகிமையும் மகத்துவமும்
அதிசயங்கள் செய்தது
கிருபையும் சத்தியமும் இரக்கமும்
அவர் அன்பும் வழி நடத்தியது
அவர் மேய்ப்பர் அவர் மீட்பர்
என் நேசர் பரிசுத்தர்
தாழ்ச்சியடைகிலேனே
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்தே நாடிடுவேன்