• waytochurch.com logo
Song # 15165

கண்களை பதிய வைப்போம்

Kangalai Pathiya Vaipom


கண்களை பதிய வைப்போம்
கர்த்தாராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன் செல்லுவோம்

சூழ்ந்து நிற்கும் சுமைகள்
நெருங்கி பற்றும் பாவங்கள்
உதறி தள்ளிவிட்டு
ஓடுவோம் உறுதியுடன்

இழிவை எண்ணாமலே
சிலுவையை சுமந்தாரே
வல்லவர் அரியணையின்
வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்

தமக்கு வந்த எதிர்ப்பை
தாங்கி கொண்ட அவரை
சிந்தையில் நிறுத்திடுவோம்
மனம் சோர்ந்து போக மாட்டோம்

ஓட்டத்தை தொடங்கினவர்
தொடர்ந்து நடத்திடுவார் (நம்)
நிறைவு செய்திடுவார்
நிச்சயம் பரிசு உண்டு

தடைகள் நீக்கும் இயேசு
நமக்கு முன் செல்கிறார்
தடை செய்யும் கற்களெல்லாம்
முன்னேறும் படிகளாகும்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com