• waytochurch.com logo
Song # 15169

கர்த்தர் என் பெலனானார்

Karththar En


கர்த்தர் என் பெலனானார்
அவரே என் கீதமானார்

மகிழ்ச்சிக்குரல் வெற்றியின் தொனி
எனது (நமது) கூடாரத்தில்

அல்லேலூயா
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு

கர்த்தர் என் பட்சத்தில்
இருப்பதால் பயப்படேன்
மனிதன் எனக்கு எதிராய்
என்ன செய்யமுடியும்

இந்த நாள் நல்ல நாள்
யெகோவா தந்த நாள்
களிகூர்ந்து மகிழ்ந்திடு
காரியம் வாய்க்கச் செய்வார்

ஈக்கள்(தேனீக்கள்) போல் பாடுகள்
எனை சூழ்ந்து வந்தாலும்
நெருப்பிலிட்ட முட்கள் போல்
சாம்பலாய் போகின்றன

கர்த்தரின் வலக்கரம்
மிகவும் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்கின்றார்
வெற்றி தருகின்றார்

விழும்படி தள்ளினார்கள்
என்னை வீழ்த்த முயன்றார்கள்
கர்த்தரோ தாங்கினார்
கரம் நீட்டி உதவினார்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com