கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
Karthar En Meypparaay
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
தாழ்ச்சி அடையேன் என்றுமே
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார்
ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை
ஆனந்தத்தால் நிறைக்கிறாரே
மகிமையின் நாமத்தினிமித்தம் அவர்
தம் நீதியின் பாதையில் நடத்துகிறார்
மரணப் பள்ளத்தாக்கில் நடந்திடினும்
மாபெரும் தீங்குக்கும் அஞ்சேன்
கர்த்தர் என்னோடென்றும் இருப்பதாலே
அவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே
சத்துருக்கள் முன்பின் எனக்காகவே
அவர் பந்தியன்றாயத்தஞ் செய்தார்
என்னைத் தம் எண்ணெயால் அபிஷேகித்து
என் பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்
ஜீவன் என்னில் உள்ள காலம் வரையும்
நன்மை கிருபை தொடரும்
கர்த்தரின் வீட்டில் நான் களிப்புடன் துதித்து
நித்திய நாட்களாய் நிலைத்திருப்பேன்