• waytochurch.com logo
Song # 15180

காலங்கள் மாறிடலாம்

Kalangal Maridalam


காலங்கள் மாறிடலாம்
கர்த்தர் மாறுவதில்லை
மாந்தர்கள் மறந்திடலாம்
இயேசு மறப்பதில்லை

அழைத்தவர் உன்னை நடத்துவார்
படைத்தவர் உன்னை காத்திடுவார்

சோதனைகள் வந்தாலும் சோர்ந்து போகாதே
வேதனைகள் வந்தாலும் தளர்ந்து போகாதே
பெலன் தரும் தேவன் இருக்கிறார்
கிருபையால் உன்னை நிரப்பிடுவார்

மலை போன்ற தடைகளும் உன் முன்னே வந்தாலும்
கண்ணீரின் பாதைகளில் நீ நடக்க நேர்ந்தாலும்
தடைகளை தகர்த்திடும் கர்த்தர்
கன்மலைமேல் உன்னை நிறுத்துவார்

பெற்றோரும் உற்றோரும் உன்னை வெறுத்தாலும்
நண்பர்களும் சொந்தங்களும் உன்னை பிரிந்தாலும்
தாயின் கருவில் உன்னைக் கண்டவர்
உன்னை விட்டு விலகிடவே மாட்டார்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com