குதூகலம் கொண்டாட்டமே
Kuthuhalam Kondattame
குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்நிதானத்தில்
ஆனந்தம் ஆனந்தமே
என் அன்பரின் திருப்பாதத்தில்
பாவமெல்லாம் பறந்தது
நோய்களெல்லாம் தீர்ந்தது
இயேசுவின் இரத்தத்தினால்
கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
பரிசுத்த ஆவியினால்
தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
தேவாலயம் நாமே
ஆவியான தேவன் அச்சாரமானார்
அதிசயம் அதிசயமே
வல்லவர் என் இயேசு
வாழ வைக்கும் தெய்வம்
வெற்றிமேலே வெற்றி தந்தார்
ஒருமனமாய் கூடி ஓசான்னா பாடி
ஊரெல்லாம் கொடியேற்றுவோம்
எக்காள சத்தம் தூதர்கள் கூட்டம்
நேசர் வருகின்றார்
ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்
மகிமையில் பிரவேசிப்போம்