கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே
Kirubai Purinthenai Aal
கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே
கிருபை புரிந்தெனை ஆள் நிதம்
திரு அருள்நீடு மெய்ஞ்ஞான திரித்து
வரில்நரனாகிய மாதுவின் வித்து
பண்ணின பாவமெலாம் அகல்வித்து
நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து
தந்திரவான்கடியின் சிறைமீட்டு
எந்தை மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு
தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
சாமி என்னை உமக்காலயம் ஆக்கி
தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து
நல்வினையே செய்திராணி அளித்து
அம்பரமீதுறை வானவர் போற்ற
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த