• waytochurch.com logo
Song # 15185

காரியம் மாறுதலாய் முடியும்

Kaariyam Maaruthalaai


காரியம் மாறுதலாய் முடியும்
நம் கர்த்தரின் கரம் அதை செய்யும்
நம் தேசத்தின் சிறையிருப்பை
மாற்றிடும் காலம் இதுவே

எழுந்துவா ஜெபித்திட எழுந்துவா துதித்திட
நாம் ஜெபித்திட நாம் துதித்திட சிறையிருப்பு மாறிடும்

துதித்திட கதவுகள் திறக்கும்
தூத சேனை வந்திறங்கும்
கட்டுகள் யாவும் அறுந்திடும்
கதவுகளெல்லாம் திறந்திடும்

ஜெபித்திட அக்கினி இறங்கும்
கர்த்தரின் வல்லமை விளங்கும்
பாகலின் ஆவிகள் அழியும்
தேசம் தேவனை அறியும்

சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்
சாத்தானின் ராஜ்ஜியம் அழிந்திடும்
தேவனின் ராஜ்ஜியம் வளர்ந்திட
தேவ சபைகள் பெருகிடும்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com