Mannava Ummai மன்னவா உம்மைத் துதிக்கின்றேன்
மன்னவா உம்மைத் துதிக்கின்றேன் - எந்நாளிலும்
மன்னவா உம்மைத் துதிக்கின்றேன் - (2)
மாட்சியும் வல்லமையும் (2)
மகிமையும் ஜெயமும் உம்முடையதே (2) - மன்னவா
1. பதினாயிரங்களில் சிறந்தவர் நீர் தானே
பரிசுத்தம் என்பது உமது பெயர் தானே (2)
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே (2)
மருதோன்றி பூங்கொத்தே வாசம் உள்ளவரே
மாறாத மதுரமே மகத்துவமானவரே - (2) - மன்னவா
2. ஜெய பெலமானவே ஜெயத்தை தருபவரே
ஜெகத்தின் இரட்சகரே ஜெயம் எனக்களிப்பவரே (2)
யுத்தத்தில் வல்லவரே சத்துருவை அழித்தவரே
சருவ வல்லவரே சாவாமை உள்ளவரே
சர்வத்தையும் ஆளுகிற சகாயர் நீர் தானே - (2) - மன்னவா
3. பரலோகம் அழைத்துச் செல்ல வருகின்ற ராஜாவே
உம்மோடு மகிழ்ந்திடவே அநுக்கிரகம் புரிந்தவரே - (2)
உமது வருகையிலே நாங்களும் இணைந்திடவே
ஆயத்தமாகிடுவோம் உம்மைத் துதித்திடவே
மகிமையடைந்திடுவோம் மறுரூபம் பெற்றிடுவோம் - (2)
- மன்னவா