• waytochurch.com logo
Song # 15199

மனமே ஓ மனமே

Maname O Maname


மனமே ஓ மனமே
நீ ஏன் அழுகிறாய்
தினமே அனுதினமே
துயரில் விழுகிறாய்

சுமக்க முடியாத சுமையை
நீ ஏன் சுமக்கிறாய்
சகிக்க முடியாத வலியில்
நீ ஏன் தவிக்கிறாய்
உன் பாரங்களை தந்துவிடு
இயேசுவிடம் வந்துவிடு
மற்றவை மறந்துவிடு

எவரும் அறியா ரகசியம்
உனக்குள் இருக்குதோ
மறக்க முடியா அவ்விஷயம்
உன் மனதை உருத்துதோ
நம் தேவனிடம் தயவுண்டு - நீ
வேண்டிக்கொண்டால் விடையுண்டு
விடுதலை உனக்குண்டு

உலகம் தரமுடியா அமைதி
தருபவர் இயேசுதான்
கலகம் வழிந்தோடும் உலகில் -
உன் புகலிடம் இயேசுதான்
நீ தேடுகின்ற ஆதரவும்
நாடுகின்ற உண்மை அன்பும்
இயேசு ஒருவரில் தான்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com