• waytochurch.com logo
Song # 15202

மரணம் வருது

Maranam varudhu


மரணம் வருது
உன் முடிவும் வருது
மரிக்கும் முன்னே
மனந்திரும்பு

சொத்துபத்து சேர்த்தது போதும்
சொகுசாக வாழ்ந்தது போதும்
சோம்பேறியாய் இருந்தது போதும்
மனந்திரும்பு
வேதவாக்கு நிறைவேறும் காலம்
வேதனைகள் ஆரம்பிக்கும் காலம்
வேகமாக தேவன் வரும் நேரம்
மனந்திரும்பு மனந்திரும்பு
மனந்திரும்பு மனந்திரும்பு

ஆதியிலே கொண்ட அன்பை மறந்தாய்
பாதியிலே வழிதப்பி நடந்தாய்
உண்மையான ஊழியத்தை துறந்தாய்
மனந்திரும்பு
அவனவன் செயலுக்கு தக்கதாய்
அவனவனுக்கு தேவன் தருவார்
தண்டனைக்கு தப்பித்திட நினைத்தால்
மனந்திரும்பு மனந்திரும்பு
மனந்திரும்பு மனந்திரும்பு

இரட்சிப்புக்கு நாள் குறித்திடாதே
இன்றுதானே இரட்சணிய நாளே
காலம் போனால் மீண்டும் வந்திடாதே
மனந்திரும்பு
ஆவி உன்னை பிரிந்திடும் முன்னே - நீ
பாவியென்று பரன் சொல்லும் முன்னே
லேவியனாய் மாறிவிட நினைத்தால்
மனந்திரும்பு மனந்திரும்பு
மனந்திரும்பு மனந்திரும்பு


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com