• waytochurch.com logo
Song # 15205

மறுரூபம் மலைமதிலே

Marurubam Malaimithilea


மறுரூபம் மலைமதிலே
மகிமையைக் கண்ட வாழ்வினிலே
மகா பெலன் வந்திறங்கிடுதே

உன்னத ஜீவன் புறப்படுதே
உயர் ஸ்தலமதிலே ஏற்றிடுதே
மகிமை மகிமை மா மகிமை விள்ங்கும்
மலை வாசம் என் மனம் மகிழும்

தேவ பர்வத கொடுமுடியில்
தேவசமூகம் இறங்கிடுதே
அருணோதயம் போல் மேகமும் நிழலிடுதே
அண்ணல் வாக்கங்கு தொனித்திடுதே

கன்மலைத் தேனும் அருந்திடவே
என் ஆவி ஆத்துமா செழித்திடுதே
எனது வாழ்வை யாக்கோபின் சுதந்திரமே

அக்கினிக் கோட்டை சூழ்ந்திடுதே
ஆவியின் பெலனே காத்திடுதே
ஜெபமே ஜெயமே தீங்குநாளின் அரணே
உபவாசம் நல் அனுபவமே

ஆச்சரியமான அலோசனை
அன்பரின் பாதம் கிடைத்திடுதே
ஜெயமாய் முழங்கும் ஸ்தோத்திர ஆராதனையும்
ஜெபதூபம் அங்கேறெடுப்பேன்

சீயோனில் கர்த்தர் ஏற்றிடுவார்
சீக்கிரம் நம்மைச் சேர்த்திடுவார்
ஒலிவ மலைமேல் அன்றவர் பாதம் நிற்கும்
ஒளியாம் இயேசு வந்திடுவார்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com