• waytochurch.com logo
Song # 15207

மனம் மகிழ்ந்து தினம் புகழ்ந்து

Manam Makiznthu Thinam


மனம் மகிழ்ந்து தினம் புகழ்ந்து
ஆவியில் ஆர்ப்பரிப்போம்
ஆத்தும நேசர் அன்பர் இயேசு
வேகம் வருகின்றாரே

ஆயத்தமாகிடுவோம் நாமே
அயராது உழைத்திடுவோம்
அல்லேலூயா அனந்தம்
அவர் துதி பாடிடுவோம்

விசுவாசம் அன்பு நம்பிக்கை கொண்டு
உலகினை ஜெயித்திடுவோம்
மகிமையை நோக்கி உலகினை மறந்து
ஓட்டத்தில் ஜெயம் பெறுவோம்

வசனங்கள் நிறைவேறும் கடைசிக் காலம்
கருத்தினில் கைக் கொண்டிடுவோம்
ஜீவ சுடரொளி பட்டயம்
சாத்தானை ஜெயித்திடுவோம்

ஆவியின் வரங்கள் யாவுமே பெற்று
ஜோதியாய் விளங்கிடுவோம்
தேவ குமாரன் இராஜாதி இராஜன்
வேகம் வருகினாரே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com