மேகமே மகிமையின் மேகமே
Meghamea Magimayin
மேகமே மகிமையின் மேகமே
இந்த நாளிலே இறங்கி வாருமே
மேகமே மகிமையின் மேகமே
வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே
ஏகமாய் துதிக்கும்போது 
இறங்கின மேகமே
ஆலயம் முழுவதும் 
மகிமையால் நிரப்புமே
வானம் திறக்கணும்
தெய்வம் பேசணும்
நேச மகனென்று
நித்தம் சொல்லணும்
மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே
முகங்கள் மாறணுமே
ஒளிமயமாகணுமே
வாழ்க்கைப்பயணத்திலே
முன்சென்ர மேகமே
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுமே
கையளவு மேகம் தான்
பெருமழை பொழிந்தது
என் நேச எல்லையெங்கும்
பெருமழை வேண்டுமே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter