• waytochurch.com logo
Song # 15220

மரித்த இயேசு உயிர்த்து விட்டார்

Maritha Yaesu Uyirthuvittar


மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா
மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா
அல்லேலூயா ஜீவிக்கிறார்
அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார்

மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே
கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே
யூத சிங்கம் கிறிஸ்து ராஜா வெற்றி பெற்றாரே
சோர்ந்து போன மகனே நீ துள்ளி பாடிடு

அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே
இறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர்
நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவோம்
நாள்தோறும் புது பெலனால் நிரம்பிடுவோம்

கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்
கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்
கனிவோடு பெயர் சொல்லி அழைத்திடுவார்
கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம்

எம்மாவூர் சீடரோடு நடந்து சென்றார்
இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார்
அப்பம் பிட்டு கண்களையே திறந்து வைத்தார்
அந்த இயேசு நம்மோடு நடக்கின்றார்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com