• waytochurch.com logo
Song # 15221

மரணமே உன் கூர் எங்கே

Maraname Un Koor Enge


மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
மரணத்தை ஜெயித்த
மன்னவன் இயேசு
எனக்குள் வந்துவிட்டார்
சாவை அழித்து அழியா வாழ்வை
எனக்கு தந்து விட்டார்

சாவுக்கு அதிபதி சாத்தானை இயேசு
சாவாலே வென்றுவிட்டார்
மரண பயத்தினால் வாடும் மனிதரை
விடுவித்து மீட்டுக் கொண்டார்

பயமில்லை மரண பயமில்லை
ஜெயமெடுத்தார் இயேசு ஜெயமெடுத்தார்.

அழிவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
அழியாமை அணிந்து கொள்ளும்
சாவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
சாவாமை அணிந்து கொள்ளும்

இறந்தோர் மேலும் வாழ்வோர் மேலும்
ஆளுகை செய்திடவே
இயேசு மரித்து உயிர்த்து எழுந்தார்
இன்றைக்கும் ஜீவிக்கிறார்

கட்டளை பிறக்க தூதர் குரல் ஒலிக்க
கர்த்தர் இயேசு வந்திடுவார்
கிறிஸ்துவுக்குள் வாழ்வோர்
கிறிஸ்துவுக்குள் மரித்தோர்
எதிர்கொண்டு சென்றிடுவோம்

பூமிக்குரிய கூடாரமான
இவ்வீடு அழிந்தாலும்
பரமன் கட்டிய நிலையான வீடு
பரலோகத்தில் உண்டு

அகரமும் னகரமும் தொடக்கமும் முடிவும்
நான் தானே என்று சொன்னவர்
அவனவன் கிரியைக்குத் தகுந்த பரிசு அளிக்க
சீக்கிரத்தில் வருகின்றார்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com