• waytochurch.com logo
Song # 15222

Messiah Yesu Nayanar மேசியா ஏசு நாயனார் எமை


மேசியா ஏசு நாயனார் எமை
மீட்கவே நரனாயினார்

நேசமாய் இந்தக் காசினியோரின்
நிந்தை அனைத்தும் போக்கவே
மாசிலான் ஒரு நீசனாகவே
வந்தார் எம் கதி நோக்கவே

தந்தையின் சுதன் மாந்தர்
சகலமும் அற வேண்டியே பாதகம்
விந்தையாய்க் குடில் மீதில் வந்தனர்
விண்ணுலகமும் தாண்டியே

தொண்டர் வாழவும் அண்டரின் குழாம்
தோத்திரம் மிகப் பாடவும்
அண்டு பாவிகள் விண்ணடையும்
ஆயர் தேடிக் கொண்டாடவும்

தேவனாம் நித்ய ஜீவனாம் ஒரே
திருச்சுதன் மனுவேலனார்
பாவிகள் எங்கள் பாவம் மாறவே
பார்த்திபன் தேவ பாலனாய்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com