Magane Un Nenjsenakku மகனே உன் நெஞ்செனக்குத்
மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ
மோட்ச வாழ்வை தருவேன் இது பாராயோ
அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே
பாவ அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே
உன்பாவம் முற்றும் பரிகரிப்பேனே -அதை
உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே
பாவம் அனைத்துமே விட்டோடாயோ -நித்ய
பரகதி வாழ்வை இன்றே தேடாயோ
உலக வாழ்வினை விட்டகல்வாயே - மகா
உவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே
உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே
அதில் ஊக்கமாய் வசிக்க இடம் கொடுப்பாயே