மகிமை மாட்சிமை நிறைந்தவரே
Magimai Matchimai Nirainthvarai
மகிமை மாட்சிமை நிறைந்தவரே
மகிழ்வுடன் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவனாம் இயேசுவை
பணிந்தே தொழுகுவோம்
உன்னத தேவன் நீரே
ஞானம் நிறைந்தவரே
முழங்கால் யாவுமே
பாரில் முடங்கிடுதே
உயர்ந்தவரே சிறந்தவரே
என்றும் தொழுதிடுவோம்
ஒருவரும் சேரா ஒளியில்
வாசம் செய்பவரே
ஒளியினை தந்துமே
இதயத்தில் வாசம் செய்யும்
ஒளிநிறைவே அருள்நிறைவே
என்றும் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவன் நீரே
பாதம் பணிந்திடுவோம்
கழுவியே நிறுத்தினீரே
சத்திய தேவன் நீரே
கனம் மகிமை செலுத்தியே நாம்
என்றும் தொழுதிடுவோம்
நித்திய தேவன் நீரே
நீதி நிறைந்தவரே
அடைக்கலமானவரே
அன்பு நிறைந்தவரே
நல்லவரே வல்லவரே
என்றும் தொழுதிடுவோம்