Maaridathore Nesa Meetpar மாறிடாதோர் நேச மீட்பர்
மாறிடாதோர் நேச மீட்பர்
மாற்றுவார் உன் வேதனை
பாவத்தாலும் நோயினாலும்
வருந்துவானேன் நம்பிவா
நம்பி வா நீ நம்பி வா
இயேசு உன்னை அழைக்கிறார்
லோக மாந்தர் கைவிடுவார்
துரோகம் கூறி தூற்றுவார்
தூய இயேசு மெய் நேசமாய்
துன்பம் தீர்ப்பார் நம்பி வா
வல்ல மீட்பர் கண்ணீர் யாவும்
வற்றிப் போகச் செய்குவார்
வற்றா ஜீவ ஊற்றாய் உன்மேல்
என்றும் ஊறும் நம்பி வா