• waytochurch.com logo
Song # 15232

மகிமை மேல் மகிமை

Magimai Mel Magimai


மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன்
மறுரூபமாவேன் மனமதிலே
மகிழ்ந்திடவே தரிசிக்கவே பரன் மகமே

உந்தன் பாதம் என்னை பலியாய்
உண்மை மனதுடன் ஒப்படைத்தேன்
ஏற்றுக் கொண்டருளும்
தேவ பெலன் விளங்கும் -தேற்றி
உயிர்ப்பித்திடும் தம் ஆவியினால்

தேவ சாயல் தேவ சமுகம் பிள்ளைகள்
அடையும் பாக்கியம் - எந்தன்
வாஞ்சையிதே என்று சேர்ந்திடுவேன்
என்னை நிரப்பிடுமே தம் ஆவியினால்

ஜீவ ஜலமே பொங்கி வருதே
ஜீவ ஊற்றுகள் திறந்தனவே - தம்
கரம் பிடித்தேன் அங்கு வழி நடத்தும்
தாகம் தீர்த்திடுவேன் தம் ஆவியினால்

பாதம் ஒன்றே போதும் என்றேன்
பேசும் ஆண்டவர் தொனியும் கேட்டேன்
இன்ப வாக்குகளே எந்தன் போஜனமே
என்னை பெலப்படுத்தும் தம் ஆவியினால்

திவ்ய குணங்கள் நாடி ஜெபித்தேன்
தூய வாழ்க்கையின் தேவை அதுவே
தேவ சேவையிலே பாடு சகித்திடவே
தாரும் பொறுமை பெலன் தம் ஆவியினால்

ஆவி ஆத்மா தேகம் முழுதும்
அன்பர் இயேசுவின் சொந்தமாமே
பூரணம் அருளும் ஆயத்தபடுத்தும்
பாடிப் பறந்திடுவேன் தம் ஆவியினால்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com