Maname Magilnthidu Thiname மனமே மகிழ்ந்திடு தினமே
மனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி
பரனை நம்பிடு அனுதினமும் பாடிடு
மா தேவனின் மகிமை வார்த்தையால்
நிறைந்து வளர்ந்துமே - தொடர்ந்து
என்றுமாய் ஆர்ப்பரிப்பாய்
என்றென்றுமாய் பெருகி உயர்ந்திட
பரனின் நீதியால் - மகிழ்ந்து
தினமே ஆர்ப்பரிப்பாய்
ஆ அன்பதின் அகலம் ஆழமும்
உயரம் அறிந்துமே - அவரின்
செயலில் ஆர்ப்பரிப்பாய்
உன் தேவனே உனக்காய் யாவையும்
சிறப்பாய் செய்கின்றார் - அவரைத்
துதித்து ஆர்ப்பரிப்பாய்