மன்னிப்பு அருளும் மாபெரும்
Mannippu Arulum Maaperum
மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே
உனதுள்ளம் சமுத்திரமோ என்னைத் தண்டிக்க
மறுத்த தரணியின் அரசே
உனதுள்ளம் கருணை ஊற்றோ
இது எங்கும் உண்டோ -2 எந்தன்
சிந்தைக்கு மேலான விந்தையல்லோ
என்னைத் தண்டிக்க மறுத்த
கைகளும் கால்களும் செய்தவற்றை
அந்த ஆணிகள் துளைத்ததால் நீக்கினீரோ
பல வகைகளில் சிக்கிய பாவியென்னை
இந்த வாதைகள் ஏற்று நீர் மீட்டதேனோ
பவுல் போன்ற தூயவர் செய்த வேலை
இந்த பாவியின் பொறுப்பினில் தந்ததேனோ
உந்தன் பரலோக தூதரும் விரும்பும் வேலை
இந்த தரணியில் எம்மிடம் வைத்ததேனோ