• waytochurch.com logo
Song # 15253

மாறிடார் எம் மா நேசரே

Maarida Een Maa Naesarae


மாறிடார் எம் மா நேசரே
ஆ மாறாதவர் அன்பெந்நாளுமே
கல்வாரி சிலுவை மீதிலே
காணுதே இம் மா அன்பிதே

ஆ இயேசுவின் மகா அன்பிதே
அதின் ஆழம் அறியலாகுமே
இதற்கிணையேதும் வேறில்லையே

பாவியாக இருக்கையிலே அன்பாய்
பாரில் உன்னைத்தேடி வந்தாரே
நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே

உள்ளத்தால் அவரை தள்ளினும்
தம் உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே

ஆவியால் அன்பை பகர்ந்திட
தூய தேவனின் விண் சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க

நியாயவிதி தினமதிலே
நீயும் நிலையாகும் தைரியம் பெறவே
பூரணமாய் அன்பு பெருக
புண்ணியரின் அன்பு வல்லதே

பயமதை நீக்கிடுமே
யாவும் பாரினில் சகித்திடுமே
அது விடுவாசம் நாடிடுமே
அன்பு ஒருக்காலும் ஒழியாதே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com