மகிமையின் தேவனைப்
Magimaiyin Devanai
மகிமையின் தேவனைப் பணிந்திடுவோம்
மகிழ்வுடன் நிதமே துதித்தே
கனிவுடன் பணிவுடன்
வணங்கி நாமே ஆர்ப்பரிப்போம்
வாசல்களில் நல் துதியுடனே
புகழ்ந்து பாடி வணங்கிடுவோம்
மகிபனை வல்லவரை
மகிழ்ந்து நாமே துதித்திடுவோம்
நன்றியுடன் உம் சந்நிதியில்
நன்மை யாவும் உணர்ந்திடுவோம்
உத்தமமாய் உண்மையுடன்
என்றென்றும் நாமே துதித்திடுவோம்
செடியாம் நம் இயேசுவிலே
நிலைத்திருந்து வளர்ந்திடுவோம்
நற்கனியால் நிறைந்துமே
இரட்சகரை நாம் உயர்த்திடுவோம்