Magimaikum Ganathirkum மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரரே
மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரரே
மங்காத புகழை உடையவரே
நிரந்தர அதிகாரம் உள்ளவரே
நித்தியமாய் எங்களை ஆள்பவரே
ராஜா இயேசு ராஜா நீரே ராஜாதி ராஜா
ராஜா இயேசு ராஜா
நீரே ராஜாதி ராஜாதி ராஜாதி ராஜா
பெருமைக்கும் புகழ்ச்சிக்கும் உரியவரே
பெரிய காரியங்கள் செய்பவரே
சகல அதிகாரம் உள்ளவரே
சர்வத்தையும் படைத்த சிருஷ்டிகரே
தொழுகைக்கும் துதிக்கும் அதிபதியே
மகத்துவும் மாட்சிமை உடையவரே
கிருபையின் ஐசுவரிய சம்பன்னரே
மரணத்தை ஜெயித்த மன்னவரே