மனித அன்பு மாறிப்போகும்
Manitha Anbu Mari Pogum
மனித அன்பு மாறிப்போகும்
மாறாத அன்பு இயேசுவின் அன்பு
நிலையில்லா இந்த உலகிலே
நிலைத்திருக்கும் இயேசுவின் அன்பு
கானல் நீராய் கண்ணுக்கு தெரியும்
கடந்து போனால் காணாமல் மறையும்
பிரிந்து போகாமல் பரிந்து பேசும்
பரமன் இயேசுவின் அன்பை பார்
பாசம் காட்டி வேஷம் போடும்
மனிதன் அன்பும் மாயை தானே
ஆணிகள் ஏற்று அழகை இழந்து
அன்பர் இயேசுவின் அன்பை பார்
வாழத்துடிக்கும் மானிடனே
சாகத் துடித்த இயேசுவைப் பார்
உதிரம் சிந்தி உயிரை கொடுத்த
உன்னதர் இயேசுவின் அன்பை பார்