• waytochurch.com logo
Song # 15263

மகளே சீயோன்

Magale Seeyon


மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி
இஸ்ராயேலே ஆரவாரம் செய்திடு
முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து களிகூரு
கெம்பீரித்துப் பாடிப் பாடி மகிழ்ந்திடு

அகமகிழ்ந்து களிகூரு
ஆரவாரம் செய்திடு

தள்ளிவிட்டார் உன் தண்டனையை
அகற்றிவிட்டார் உன் பகைவர்களை
வந்துவிட்டார் அவர் உன் நடுவில்
இனி நீ தீங்கைக் காணமாட்டாய் அகமகிழ்

உன் பொருட்டு அவர் மகிழ்கின்றார்
உன்னைக் குறித்து அவர் பாடுகின்றார்
அனுதினமும் அவர் அன்பினாலே
புது உயிர் உனக்குத் தருகின்றார்

தளரவிடாதே உன் கைகளை
பயப்படாதே நீ அஞ்சாதே
இனி நீ இழிவு அடையமாட்டாய்
உனது துன்பம் நீக்கிவிட்டார்

உலகெங்கும் பெயர் புகழ்பெறச் செய்வேன்
அவமானம் நீக்கி ஆசீர்வதிப்பேன்
ஒதுக்கப்பட்ட உன்னைச் சேர்த்துக் கொள்வேன்
ஊனமுற்ற உன்னைக் காப்பாற்றுவேன்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com