Malar Maname மலர் மணமே
மலர் மணமே(3) வீசிடுதே
மங்களமே(3) செழித்திடுதே
ஜீவ நறுமணமே(எங்கள்) தேவ திருமணமே
ஆதியில் ஏதேனில் ஆதாம் ஏவாளுடன்
ஆவி பிதா வார்த்தை மூவர் முன்னால்
மங்களம் அன்று போல் இன்றும்
என்றும் செழிக்குது மங்களம்
தேவ திருச்சபையே தூய மணவாளியாய்
தேவகுமாரன் (திரு)மணம் புரிவதுபோல்
ஆவியில் ஜோடிக்கும்
ஆதிமெய் அன்பினால்
ஜோதி அன்பின் கயிற்றால்
இணைத்தாசீர் தாருமே
எபெனேசரானவரே இம்மானுவேலரே
இறுதிவரைலும் இருப்பதாயுரைத்தீரே
உறுதி வார்த்தை இவர் இருவரில் தங்கிட
திருமண மங்களம் கிருபையில் வாழ்ந்திட