Masatra Devaattukutti Manuvel மாசற்ற தேவாட்டுக்குட்டி மனுவேல்
மாசற்ற தேவாட்டுக்குட்டி மனுவேல் மேசியாவே
வாரும் எனைப் பாரும் பவந்தீரு மேசையாவே
தீரும் வகை காணாதிந்த ஜெக மீதலைந் தயர்ந்தேன்
தேவா வினைதீர் வா வென்றுன் திருப்பாதத்தைத் துயர்ந்தேன்
திருப்பாத மென் கதியே பவத் திரளோ பெருமலையே
தீயேனுடல் சிரசும் அதைச் சுமக்கப் பெலனிலையே
சுமந்தோன் இங்கே வா வா வைஉன்சுமையை என்தோள் மேலே
சுக ஆறுதல் தருவேனென்று சொன்னீர் மனுவேலே
சொன்னீர் ஐயா ரத்தாம்பரச் சிவப்பாம் பவக் கறையும்
சென்னீர் படப் பறந்தோடி என்தேகம் வெண்மை நிறையும்
நிறைவா கரக்கடலே மறை நிறை யாகமத்திடலே
குறையா வரம்தயை பூரணம் குடிகொண்டதுன் னுடலே
உடலே திருவிருந்து சுவாமி உதிரம் திருமருந்து
உலகாசையைத் துறந்து எனதுளமே அதை அருந்து
அருந்தப் பவச்சுமை நோவிடர் ஆறாத்துயர் சாபம்
அகலும் அவர் பதச் சேவையால் ஆறுந் தேவ கோபம்
ஆறும் மனந்தேறும் அவரருட்கண் என்மேல் சாரும்
ஆத்மா கரையேற அவர் அன்பை ருசி பாரும்
அன்பால் எனைத்தழுவி என்றன் ஆத்மக்களை யாற்றி
அவர் மார்பினில் அணைத்தார் ஏழையடியேன் மனந்தேற்றி
மனமோ யேசு சாந்தம் அன்பு மனத்தாழ்மையைப் பூண்டு
மனுவேல் யேசு நாமம் உன்னில் மகிமைப்பட வேண்டும்