மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்
Marithor Evarum Uyirthezhuvaar
மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்
வானெக்காளத் தொனி முழங்க
எரி புகை மேக ரத மேறி
ஏசு மகா ராஜன் வருங்கால்
தூதர் மின்னாற்றிசை துலங்க
ஜோதி வான் பறை இடி முழங்க
பாதகர் நெஞ்சம் நடுநடுங்க
பரிசுத் தோர் திரள் மனதிலங்க
வானம் புவியம் வையகமும்
மடமட வென்று நிலை பெயர
ஆன பொருளெல்லாம் அகன் றோட
அவரவர் தம் தம் வரிசையிலே
அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர்
அழியா மேனியை அணிந்திடுவார்
எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர்
என்றும் வாழும் ஜோதிகளாய்