Yesu Naadha - மாரநாதா இயேசு நாதா
Maaranaadha….Yesu Naadha
மாரநாதா இயேசு நாதா
சீக்கிரம் வாரும் ஐயா
1. மன்னவன் உம்மைக் கண்டு மறுரூபம் ஆகணுமே
விண்ணவர் கூட்டத்தோடு நான் எந்நாளும் பாடணுமே
வாரும் நாதா இயேசு நாதா (2)
2. குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன்
சண்டைகள் பொறாமைகள்
என்றோ (நான்) வெறுத்துவிட்டேன்
3. பெருமை பாராட்டுகள் ஒருநாளும் வேண்டாம் ஐயா
சிற்றின்பம் பணமயக்கம் சிறிதளவும் வேண்டாம் ஐயா
4. நியமித்த ஓட்டத்திலே நித்தம் நான் ஓடிடுவேன்
நித்திய கிரீடம்தனை (நான்) நிச்சயமாய் பெற்றுக்கொள்வேன்