மனதுருகும் தெய்வமே இயேசையா
Manadhurugum Dheivamae Yesaiyaa
மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை
அவை காலைதோறும் புதிதாயிருக்கும்
1. மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக்கொண்டு
துக்கங்களை சமந்து கொண்டீர் - ஐயா
2. எங்களுக்கு சமாதானம்
உண்டு பண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா - ஐயா
3. சாபமான முள்முடியை
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் - ஐயா
4. எங்களது மீறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகமானோம் - உந்தன்
5. தேடி வந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய் தினம்
தினம் அற்புதம் செய்தீர் - ஐயா