Neer Thantha Unavellam நீர் தந்த உணவெல்லாம்
நீர் தந்த உணவெல்லாம் ஆசீர்வாதம் தான்
கையிட்ட வேலையும் பிரயாசங்கள் தான்
நீர் தந்த வருஷங்கள் நன்மையாய் முடிகிறதே
நீர் செல்லும் பாதையெல்லாம் நெய்யைப் பொழியுதே
வேறிடத்திலே வாழ்வதை விட
உம்மிடத்திலே நெஞ்சம் வாழ விரும்புதே
யாரிடத்திலே நாங்கள் போவது?
வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மில் உள்ளது
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
1) வற்றாத நீரூற்றாய் என் வாழ்வை மாற்றினீர்
வளமிக்க தோட்டம் போல செழிப்பாக்கினீர் ..ஓ
நதி சென்ற இடமெல்லாம் இடம் கொண்ட மரமெல்லாம்
மரம் தந்த கனியெல்லாம் விருந்தாக்கினீர்
பரத்திலிருந்துமே இறங்கி வருகிற
நன்மையான ஈவு எல்லாம் எனக்கு அருளினீர்
பரம குயவனே உமது கரங்களில்
தகுதியுள்ள பாத்திரமாய் என்னை மாற்றினீர் - ஆராதனை
2) நீர் தந்த தேசத்தில் நலமாக வாழுகிறேன்
பாலும் தேனும் இங்கு பாய்ந்து ஓடுதே
நீர் தந்த இல்லத்தில் அமைதியாய் வாழுகிறேன்
சுகமும் சமாதானமும் தங்கி இருக்குதே
கால் மிதிக்கிற தேசம் யாவுமே
கர்த்தர் இயேசுவே உமக்கு சொந்தமே
கண்கள் பார்க்கிற காட்சி எங்குமே
கல்வாரி நாதரே கொடிகள் பறக்குமே - ஆராதனை
3) நீர் தந்த தாலந்தை உமக்காக பயன்படுத்தி
இன்னும் அதிக தாலந்தை ஈட்டச் செய்திட்டீர்
நீர் தந்த திறமைகளை உமக்காக செயல்படுத்தி
கொஞ்சத்தில் உண்மையோடு வாழ வைத்திட்டீர்
உண்மையுள்ளவன் உத்தம ஊழியன்
தேவனுடைய ராஜ்ஜியத்தில் பங்கடைபவன்
என்று கூறியே என்னை ஏற்றுக் கொண்டீரே
தேவனே உம் மகிழ்ச்சிக்குள்ளே சேர்த்துக் கொண்டீரே - ஆராதனை