Nithya snehathal நித்திய சிநேகத்தால்
நித்திய சிநேகத்தால் என்னை நேசித்தீர்
தாயின் அன்பிலும் மேலானதே
ஈடு இணையில்லா தேவன் நீரே
உம்மை விட்டெங்கும் போக மாட்டேன் நான்
உம்மில் சேர்ந்து என்றும் வாழ்ந்திடுவேன்
உம்மில் சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
1) திவ்ய அன்பினால் என்னை இரட்சித்தீர்
உண்மை இரட்சகர் நீர் தானே
உண்மை தேவன் நீர் ஒருவர் தானே
உம் சித்தம் செய்வேன் உம்மைப் போல் மாற -(2)
என்னைத் தருகின்றேன் உண்மையாக
என்தன் வாழ்க்கையும் உமக்காக - நித்திய
2) பரலோகத்தில் எனது பெயர்
எழுதி வைத்தீர் இயேசுவே
இதுவே எனது ஆசையே
வாரும் இயேசுவே என்னைச் சேர்த்திட - (2)
ஆசையாய் நானும் காத்திருக்கின்றேன்
இனி தாமதம் வேண்டாம் இயேசுவே - நித்திய