Neer Seitha Nanmaigal Yellam நீர் செய்த நன்மைகள் எல்லாம்
நீர் செய்த நன்மைகள் எல்லாம்
நான் இன்று நினைக்கின்ற போது
உம் நாம துதி என் நாவில்
என்றென்றும் குறையாதிருக்கும் - நீர் செய்த
1. மரண இருளில் என்னைத் தள்ளினாலும்
எனக்கொரு பயமும் இல்லையே - (2)
தேவரீர் என்னோடு கூட இருப்பதால்
எனக்கொரு தீங்கும் இல்லையே - (2) - நீர் செய்த
2. தீயின் நடுவினில் என்னைத் தள்ளினாலும்
எனக்கொரு தீங்கும் இல்லையே - (2)
அக்கினி மதிலாய் காக்கின்ற தேவன்
முடி கூட கருக விட்டீடாரே - (2) - நீர் செய்த
3. சிங்கங்கள் நடுவே என்னைத் தள்ளினாலும்
யூதாவின் ராஜசிங்கம் எனக்குண்டு - (2)
கண்மணி போல காக்கின்ற தேவன்
கருத்தாக என்னைக் காப்பாரே - (2) - நீர் செய்த