• waytochurch.com logo
Song # 15297

Nee Uyirodu Irukkum Naalellaam நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம்



நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
ஒருவரும் உன்னை எதிர்ப்பதில்லை
நான் மோசேயோடே இருந்ததுபோல
உன்னோடு இருப்பேன் என் மகனே (மகளே)

திகையாதே, கலங்காதே
நீ போகும் இடமெல்லாம் வருவேன் - (2)

1. தாய் தன் சேயை மறந்துபோனாலும்
நான் உன்னை மறப்பதில்லை
துன்பத்தால் பாரத்தால் நசுங்குண்டு போகையில்
அடைக்கலமாய் இருப்பேன் - (2) - திகையாதே

2. உன் ஜெபத்தை தள்ளாமல் கிருபையை விலக்காமல்
நான் உன்னை தாங்கிடுவேன்
தீயையும் தண்ணீரையும் கடந்து வரும்போது
நான் உன்னை ஏந்திடுவேன் - (2) - திகையாதே
- நீ உயிரோடு


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com