Vaada Raja வாடா ராஜா
நல்லதையே கத்துக்கோ நம்பிக்கைய வைச்சுக்கோ
நமக்கு இனி என்ன குறையோ
தடுப்பவர் யாரோ தடைகளும் ஏதோ
சிங்கத்துக்கு சிலந்தி வலையோ
நம்ம சொத்து பத்து இந்த பத்துவிரல்
எந்த சபையிலும் இனி உந்தன் குரல் - (2) - நல்லமையே
1) என் கனவெல்லாம் உன் முகம் மட்டும்
புன்னகை சிந்தி ஒளி வீசட்டும்
உன் மனசேல்லாம் என் ஞாபகம்
எந்த நிலையிலும் அலைமோதட்டும்
வாடா ராஜா வாடா ராஜா
வாடா ரோஜா வாடா ரோஜா
வாழ்க்கை என்ன வாழ்ந்து பார்ப்போம் வளமாக
நாளை உந்தன் தோளின்மீது
வெற்றி மாலை ஏந்திக் கொண்டு
காலம் உன்னைத் தேடி வரும் துதிபாட - நல்லதையே
2) அலைகடல் உந்தன் முழங்கால் ஆழம்
மலை சிகரங்கள் முதுகில் தாங்கும்
செயல்களில் எல்லாம் ஜெபம் ஜெயமாகும்
வழிகளில் இனி வசந்த காலம்
நீயா நானா நீயா நானா
நானே நீயா நீயே நானா
உன்னில் என்னைக் கண்டு நானும் மகிழ்ந்திருப்பேன்
மேலே மேலே ஏறும்போது
கீழே நின்று கையை தட்டி
அன்னை போல நெஞ்சில் நித்தம் சுமந்திடுவேன் - நல்லதையே