Needhiyilea Um Mugam Naan நீதியிலே உம் முகம் நான்
நீதியிலே உம் முகம், நான்தரிசிப்பேன் தரிசிப்பேன்
விழிக்கும்போது உம் சாயலால்
திருப்தியாவேனே
முகமுகமாய் தரிசிப்பேன்
அகநகையாய் மகிழ்வேன்
1.முகமுகமாய் தரிசித்தார் யாக்கோபு
இஸ்ரவேலாய் மாறினார் அல்லவோ?
என்னையும் மாற்றியே மறுரூபமாக்கியே
மகிமையின் தரிசனம் தந்திடும் தேவா
2.சொப்பனமோ தரிசனமோ அல்லவே,
நேருக்கு நேராய் பேசினார் மோசேயும்
அகத்திலும் முகத்திலும் அனுதின நடையிலும்
இயேசுவைப் போல், முற்றிலும் மாறிடுவேனே
3.உயிருக்குயிராய் நேசித்த யோவானும்
தரிசித்தார், உம் முகம் பத்முவிலே
பரலோக காட்சியை கண்குளிரக் கண்டிட
தெய்வீக பிரசன்னம் தந்திடும் தேவா
4.நிழலாக காண்கிறேன் இப்போது
முகமுகமாய் தரிசிப்பேன் அப்போது
உள்ளான பூரணத்தின் சாயலோடு
உன்னதத்தில் உம்மோடு உலாவிடுவேன்