நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
Nesikkiren Ummai Thaane
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
நிலையில்லாத இந்த உலகத்திலே
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
உம்மைத்தானே இயேசையா
ஒவ்வொரு நாளும் எனது கண் முன்
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை
உம்மையல்லாமல் வேறே விருப்பம்
உள்ளத்தில் இல்லையே
நிம்மதியே நிரந்தரமே என்
நினைவெல்லாம் ஆள்பவரே
ஐயா உம் தாகம் எனது ஏக்கம் 
அடிமை நான் கதறுகிறேன்
என் ஜனங்கள் அறியணுமே
இரட்சகர் உம்மைத் தேடணுமே
உமது வேதம் எனது மகிழ்ச்சி
ஓய்வின்றி தியானிக்கின்றேன்
ஆற்றங்கரை மரமாக
அயராமல் கனி கொடுப்பேன்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter