• waytochurch.com logo
Song # 15307

neer ennodu irukkum pothu நீர் என்னோடு இருக்கும் போது


நீர் என்னோடு இருக்கும் போது
எந்நாளும் வெற்றி வெற்றியே
தோல்வி எனக்கில்லையே-நான்
தோற்றுப் போவதில்லையே

அல்லேலூயா அல்லேலூயா
மலைகளை தாண்டிடுவேன்-கடும்
பள்ளங்களை கடந்திடுவேன்
சதிகளை முறியடிப்பேன்
சாத்தானை ஜெயித்திடுவேன்

சிறைச்சாலை கதவுகளும்
என் துதியினால் உடைந்திடுமே
அபிஷேகம் எனக்குள்ளே நான்
ஆடிப்பாடி மகிழ்ந்திடுவேன்

மரணமே கூர் எங்கே
பாதாளமே ஜெயம் எங்கே
கிறிஸ்து எனக்கு ஜீவன்
சாவெனக்கு ஆதாயமே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com