• waytochurch.com logo
Song # 15308

நீங்க போதும் இயேசப்பா

Neenga Pothum Yesappa


நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா

எத்தனை இன்பமே உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே

புதுபெலன் தருகிறீர் புது எண்ணெய் பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர்

அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன்

தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com