நம்பியே வா நல்வேளையிதே உன்
Nambiye Vaa Nalvelaiyithe
நம்பியே வா நல்வேளையிதே உன்
நேசர் இயேசுவையே நம்பிடுவாய்
கர்த்தரிடம் விசுவாசமே
கடுகளவு உனக்கிருந்தால்
கதறிடும் உன்னை காத்திடுவார்
கலங்கிடாமல் நீ நம்பிடுவாய்
திக்கற்றோரின் தகப்பனவர்
தவிக்கும் விதவையின் தேவன் அவர்
அமைதியிழந்து கண்ணீரோடே
அலைந்திடாமல் நீ நம்பியே வா
கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் செவி மந்தமாகமில்லை
தேவனின் பின்னே உன் வினைகள்
தடுத்து ஜெபத்தைத் தள்ளிடுதே
பாவங்களை மன்னித்திடும்
பரலோக அதிகாரமுள்ள
இயேசு கிறிஸ்து முன்னிலையில்
இன்று என்னைத் தாழ்த்தி நம்பிடுவாய்
சூரியனின் கீழ் உள்ளவை
சகலமும் வெறும் மாயையல்லோ
மானிடர் என்றும் மாறிடுவார்
மாறாத இயேசுவை நம்பிடுவாய்